தனியார் சோலார் மின் நிலைய பொக்லைன் இயந்திரத்தை விவசாயிகள் சிறைபிடிப்பு

by Editor / 25-09-2022 05:15:04pm
தனியார் சோலார் மின் நிலைய பொக்லைன் இயந்திரத்தை விவசாயிகள் சிறைபிடிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்திற்கு சொந்தமான கண்மாய் நீர்பிடிப்பு பகுதி முழுவதையும் அதானி சோலார் மின் நிலைய நிர்வாகம் சார்பில் ஊராட்சி நிர்வாகம் அனுமதி இன்றி பொக்லைன் இயந்திரம் மூலமாக 5 லட்ச ரூபாய் மதிப்பிலான சீமைக் கருவேல மரங்களை வெட்டி சாய்த்து தீ வைத்து எரிக்க முயற்சித்ததால்  சோலார் மின் நிலையத்தினரின்  2 பொக்லைன் இயந்திரங்களை அப்பகுதி விவசாயிகளால்  சிறைப்பிடிக்கப்பட்டு  பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஆசை வார்த்தை பொய்யான வாக்குறுதி அளித்து தனியார் சோலார் மின் நிலையம் தங்களது விளை நிலங்களை கையகப்படுத்திய நிலையில் தாங்கள் வாழ்வாதாரம் மற்றும் வேலையின்றி  பரிதவித்து, தவித்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துவரும்  நிலையில் தற்போது தாங்ஙகளின் ஆடு மாடு கோழி,மற்றும் காட்டுப்பகுதியில் வசிக்கும்  மயில் உள்ளிட்ட கால்நடைகளுக்கும் கன்னி வெடி விசம் வைத்து கொன்றுவரவுவதாக குற்றம் சாட்டி தாங்களின் வாழ்வாதரத்தை தனியார் சோலார் மின் அதிகாரிகள் செய்துவருவதாகவும் கூறி வேதனை தெரிவிக்கின்றனர்.
 

 

Tags :

Share via