நள்ளிரவில் காய்கறி வியாபாரி வெட்டிக் கொலை

by Staff / 29-04-2024 11:51:48am
நள்ளிரவில் காய்கறி வியாபாரி வெட்டிக் கொலை

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் அப்பு (27). காய்கறி வியாபாரியான இவர் மினி வேனில் தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு நேற்று (ஏப்ரல் 28) நள்ளிரவு சென்று கொண்டிருந்தார். வல்லம் புறவழிச் சாலையில் சென்ற இந்த மினி வேனை பின்னால் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இருவர் குறுக்கே வந்து மறித்தனர். இதையடுத்து அப்புவை இருவரும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவம் முன் விரோதம் காரணமாக நிகழ்ந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

 

Tags :

Share via

More stories