சிறுவன் மீது பாலியல் வன்கொடுமை; சிபிஎம் உறுப்பினர் கைது

by Staff / 29-04-2024 11:58:25am
சிறுவன் மீது பாலியல் வன்கொடுமை; சிபிஎம் உறுப்பினர் கைது

கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தை அடுத்த கொயிலாண்டி பகுதியில் சிபிஎம் கட்சியின் கிளை அலுவலகத்தில் சிறுவனை இயற்கைக்கு மாறாக பாலியல் வல்லுறவு செய்த நபர் கைது செய்யப்பட்டார். சிபிஎம் கிளைக் குழு உறுப்பினர் பிரிஜேஷ் செய்தித்தாள்களை வழங்க வந்த சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார்.மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு நாளான கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. பதிவு செய்யப்பட்ட புகாரின்படி, சிறுவன் சிங்காபுரத்தில் உள்ள சிபிஎம் அலுவலகத்திற்கு செய்தித்தாள்களை வழங்க வந்திருந்தான். அப்போது அலுவலகத்தில் பிரிஜேஷைத் தவிர வேறு யாரும் இல்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சிறுவனை அடைத்து வைத்து வாயைப் பொத்தி, பாலியல் வல்லுறவு செய்துள்ளார்.

 

Tags :

Share via
Logo