பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 87-வது பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

by Staff / 25-07-2025 10:39:18am
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  87-வது பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

விழுப்புரம் மாவட்டம் கீழ்சிவிரி கிராமத்தில் கடந்த 1939 ஜூலை 25ல் ராமதாஸ் பிறந்தார். தமிழ்நாடு அரசியலில் மூத்த தலைவராக கவனிக்கப்படும் ராமதாஸ் எம்.ஜி.ஆர்., கருணாநிதி காலத்தில் பல போராட்டத்தை மிகத்தீவிரமாக முன்னின்று நடத்தி இருக்கிறார். 1989ல் பாட்டாளி மக்கள் கட்சியை நிறுவியர், பசுமைத்தாயகம், வன்னியர் சங்கம் உட்பட பல அமைப்புகளையும் நிர்வகித்து இருக்கிறார். இன்று அவர் தனது 86 வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

 

Tags : CM M.K. Stalin wishes PMK founder Dr. Ramadoss on his 87th birthday

Share via