by Staff /
26-06-2023
04:49:53pm
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பாலப்பள்ளம் குன்னன்விளையை சேர்ந்தவர் ஆசீர் நேச ராஜ்(43). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இரவு இவர் குப்பியந்தறை சந்திப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செம்பொன்விளை பகுதியை சேர்ந்த பழனி அவரை பார்த்ததும் ' ஏன் இங்கு நிற்கிறாய்? 'என கேட்டார்.<br />
அதற்கு ஆசீர் நேச ராஜ் 'மது அருந்த வந்ததாக கூறினார். இது தொடர்பாக இருவருக்கும் வாய்த்கராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பழனி கீழே கிடந்த கல்லை எடுத்து ஆசீர் நேச ராஜை சராமரியக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் நாகர்கோவில் அருகே ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குளச்சல் போலீசார் பழனி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :
Share via