அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்

by Editor / 25-04-2025 02:55:14pm
அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்

மாநிலங்களில் உள்ள அனைத்து பாகிஸ்தான் நாட்டினரையும் அடையாளம் கண்டு வெளியேற்ற வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய அமித்ஷா, "அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தானியர்கள் உடனடியாக பாகிஸ்தானுக்குத் திரும்புவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.
 

 

Tags :

Share via