சவுக்கு சங்கரை காவலில் எடுக்க மனுதாக்கல்

by Staff / 06-05-2024 03:32:42pm
சவுக்கு சங்கரை காவலில் எடுக்க மனுதாக்கல்

யூ டியூபர் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, கோவை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் மனு அளித்துள்ளனர். காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் சவுக்கு சங்கரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

 

Tags :

Share via