காவல் நிலையத்தில்தினமும் கையெழுத்திட உத்தரவு

பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பாடலாசிரியர் சிநேகன் கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜகவை சேர்ந்த நடிகை ஜெயலட்சுமி மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் ஜெயலட்சுமி தான் நடத்தி வரும் ‘சினேகம் அறக்கட்டளை’ என்ற பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடுவதாக தெரிவித்து இருந்தார்.
இதை தொடர்ந்து நடிகை ஜெயலட்சுமியும் ஸ்நேகன் மூது புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தான் அறக்கட்டளை வழியாக சமூக பணிகளை செய்துவருவதாகவும், தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே சிநேகன் பொய் புகார் அளித்துள்ளதாகவும் ஜெயலட்சுமி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இந்த புகாரின் பேரில் தன்னை கைது செய்யக்கூடாது என சிநேகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு அளித்த நிலையில், அவருக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மறு உத்தரவு வரை சிநேகன் திருமங்கலம் காவல் நிலையத்திற்கு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
Tags :