தமிழுக்கு தொண்டாற்றிய க.நெடுஞ்செழியன்

by Staff / 04-11-2022 05:21:33pm
தமிழுக்கு தொண்டாற்றிய க.நெடுஞ்செழியன்

இன்று காலமான பேராசிரியர் க.நெடுஞ்செழியன் தமிழ், திராவிட இயக்க சிந்தனைகளையொட்டி ஏராளமான ஆய்வு நூல்களை எழுதியவர் ஆவார்.இவரது நூல்கள் - இந்திய பண்பாட்டில் தமிழ்கும், தமிழகமும், மெய்க்கீர்த்திகள், தமிழ் இலக்கியத்தின் உலகாய்தம், உலகத் தோற்றமும் தமிழர் கோட்பாடும், சமூக நீதி, தமிழர் இயங்கியல் - தொல்காப்பியமும் சகர சம்கிதையும், தமிழர் தருக்கவியல், ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம், தமிழ் எழுத்தியல் வரலாறு, சங்க கால தமிழர் சமயம், தமிழரின் அடையாளங்கள், சித்தனவாயில், சங்க இலக்கிய கோட்பாடுகளும் சமய வடிவங்களும், மரப்பாச்சி (கவிதை), நாகசாமி நூலின் நாசவேலை, ஆசிவகமும் ஐயனார் வரலாறும், பேரறிஞர் அண்ணாவும் பெருங்கவிஞர் குமாரன் ஆசானும், தமிழக குகைப்பள்ளிகளின் சமயம், பக்தி இயக்கங்களும் வைதிக எதிர்ப்பும், இந்திய சமூக புரட்சியில் திராவிட இயக்கத்தின் கொடை, தொல்காப்பியம் - திருக்குறள் காலமும் - கருத்தும், தமிழர் அகத்திணை மரபுகளும் இந்திய காதற்பாடல்களும், தரும சாத்திரத்தின் சுருக்கமா திருக்குறள், சமணோர் என்போர் சனரா? தமிழர் சிந்தனை வரலாறு - தொல்காப்பியம் முதல் பெரியாரியம் வரை ஆகியவை ஆகும்.

 

Tags :

Share via