சட்டவிரோதமாக மதுவிற்ற 5 பேர் கைது, 185 மதுப்பாட்டில்கள் பறிமுதல்

by Staff / 27-01-2023 05:20:09pm
சட்டவிரோதமாக மதுவிற்ற 5 பேர் கைது, 185 மதுப்பாட்டில்கள் பறிமுதல்

கரூர் மாவட்டம் தோகைமலை காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று குடியரசு தினவிழாவில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சட்ட விரோதமாக மது விற்பனை குறித்து போலீசார் அப்பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கல்லடை பகுதியில் பெட்டிகடையில் மதுவிற்ற மெய்க்கப்ப உடையார் மகன் முத்துசாமி (62), சுரக்காம்பட்டி பிரிவு ரோடு அருகே கலிங்கன் மகன் தங்கவேல் (52), கானாபுதுரில் வீட்டின் பின்புறம் மதுவிற்ற கருப்பையா மனைவி துளசி (49), சின்னரெட்டியபட்டியில் பெட்டிகடையில் மதுவிற்ற சிவக்குமார் மனைவி மலர்கொடி (38) மற்றும் கொசூர் டாஸ்மாக் பாரில் மதுவிற்ற திண்டுக்கல் வெள்ளையகவுண்டனுரை சேர்ந்த வடிவேல் மகன் வெங்கடேஷ் (36) ஆகிய 5 பேரை பிடித்த போலீசார் வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக அவர்கள் வைத்திருந்த 185 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்

 

Tags :

Share via
Logo