ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு.

by Editor / 14-01-2025 04:30:58pm
ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற இருந்த  யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு.

பொங்கல் தினத்தன்று நடைபெற இருந்த யு.ஜி.சி. நெட் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. யூஜிசி நெட் தேர்வு பொங்கல் பண்டிகை நாளில் நடத்த கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்வு அதே தேதியில் மாற்றமின்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு.

Share via