கடையம் அருகே பொங்கலை முன்னிட்டு மகள் வீட்டிற்கு வந்த தாய் சாலை விபத்தில் பலி

by Editor / 14-01-2025 12:06:07pm
கடையம் அருகே பொங்கலை முன்னிட்டு மகள் வீட்டிற்கு வந்த தாய் சாலை விபத்தில் பலி

மதுரை மாவட்டம் அனுப்பாலடி.பகுதியைச் சேர்ந்த கதிரவன் மனைவி கற்பகம்இவர் மகள் தென்காசி மாவட்டம் கீழ ஆம்பூர் அருகே உள்ள மஞ்சப்புள்ளி காலனியில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்மகளை பார்ப்பதற்கு வந்த கற்பகம் புளியங்குடியிலுள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு அவர்களது உறவினர் மகனை அழைத்துக்கொண்டு புல்லட் பைக்கில் புளியங்குடியில் இருந்து கீழ ஆம்பூர் அருகே உள்ள பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட் வேகத்தடை இருப்பதே தெரியாத அளவிற்கு இருக்கும் வேகத்தடையில் எதிர்பாராத விதமாக இருசக்கரவாகனத்தில்  இருந்து நிலை தடுமாறி விழுந்ததில் கற்பகம் சம்பவ இடத்தில் பலியானார்.தகவல் அறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்தில் சென்று கற்பகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தநிலையில் இந்த வழக்கை  தென்காசி இருப்புபாதை போலீசார் எடுத்து விசாரணை செய்துவருகின்றனர்.

 

Tags : கடையம் அருகே பொங்கலை முன்னிட்டு மகள் வீட்டிற்கு வந்த தாய் சாலை விபத்தில் பலி

Share via