சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

by Admin / 28-12-2024 12:13:18pm
சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னை மாநகர காவல் ஆணையரும் உயர் கல்வித் துறை அமைச்சரும் அனைத்து உள்ள வாக்குமூலம் முரண்பாடுகள் உடையதாக இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவி புகார் செய்ததாக போலீஸ் கமிஷனர் கூறினார் அதே சமயம் உயர் கல்வி அமைச்சர் செல் மூலம் அல்லாமல் நேரடியாக புகார் செய்ததாக கூறியுள்ளார். எஃப் ஐ ஆர் வெளியானதற்கு தொழில்நுட்ப கோளாறையில் காரணம் என்றும் ஆணையரே கூறியிருப்பது எப்படி இருந்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எப்படி போலீசில் புகார் அளிக்க முடியும் என்கிற கேள்வியை எழுப்பியதோடு அண்ணா பல்கலைக்கழகத்தில் 70 சிசிடிகளில் 56 மட்டுமே செயல்படுவதாகவும் பல்கலைக்கழகத்தின் இந்த நிலைக்கு அரசு இவ்வாறு இருப்பதற்கு வெட்கப்படுகிறேன் என்றும் வரும் டிசம்பர் 30ஆம் தேதி சென்னை தவிர மாநிலம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்றும் அறிவித்தார்.

 

Tags :

Share via