படுக்கைக்கு வர மறுத்த மனைவி கொடூர கொலை

திருவாரூர்: கூத்தாநல்லூரை சேர்ந்த ரமேஷ் (49), தனது மனைவி செல்வியை (39) படுக்கைக்கு அழைத்துள்ளார். அதற்கு செல்வி, மகன் வினித்திற்கு (24) சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், செல்வியை கீழே தள்ளி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். செல்வி கூச்சலிட்டதால் மேலும், கோபமடைந்த ரமேஷ், செல்வியை தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags :