“பாலியல் உறவுக்கான வயது 18க்கு குறைவாக இருக்கக்கூடாது”

டெல்லி: மத்திய அரசுக்கும், நிபுன் சக்சேனா என்பவருக்கும் இடையிலான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுகுறித்து பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறியிருப்பதாவது, “பரஸ்பர சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவுக்கான வயது வரம்பு 70 ஆண்டுகளாக 16 வயதாக இருந்தது. ஆனால், 2013ஆம் ஆண்டில் 18 ஆக உயர்த்தப்பட்டது. 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுவரை, 16 முதல் 18 வயதுக்குட்பட்ட இளம் வயதினர் சம்பந்தப்பட்ட 'போக்சோ' வழக்குகளின் எண்ணிக்கை 180 சதவீதம் அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
Tags :