வீட்டு சுவர் மீது ஏறி நின்ற கார்..

தெலங்கானா மாநிலத்தில், சாலையில் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் சுவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது. மேட்சல்-டண்டிகல் பியஸ் பகுதியில் உள்ள ஷம்பிபூரில், கார் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்குச் சென்ற போக்குவரத்து போலீசார், வீட்டின் சுவர் மீது இருந்த காரை, கிரேன் மூலம் தரையிறக்கினர். விசாரணையில், ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் கார் ஓட்டியது தெரியவந்துள்ளது.
Tags :