போரில் இத்தனை கோடி சேதமா? அமெரிக்காவிடம் கேட்கும் இஸ்ரேல்

ஈரானுடன் நடந்த போருக்கு பிறகு இஸ்ரேல் கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளது. நேரடி இழப்புகள் மட்டும் சுமார் ₹1 லட்சம் கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த செலவுகள் ₹1.67 லட்சம் கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இராணுவ செலவுகள், கட்டிட சேதங்கள், குடிமக்களுக்கு இழப்பீடு ஆகியவை இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இராணுவ ஆயுதங்கள் மற்றும் கையிருப்பு படைகளுக்காக ₹97,600 கோடி நிதி கோரியுள்ளது. தற்போது அமெரிக்காவில் இருந்து நிதியுதவியோ அல்லது கடனுதவியோ பெற இஸ்ரேல் அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
Tags :