மூழ்கத் தொடங்கிய நந்தி சிலை
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்த நிலையில் பண்ணவாடியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை படிப்படியாக தண்ணீரில் மூழ்கத் தொடங்கியுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயரும் பட்சத்தில் நந்தி சிலை முழுவதும் மூழ்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
Tags :