ஆடித் தபசு... ஹரியும் சிவனும் இணைந்த உருவமாக சங்கர நாராயணர் உருவத்தில் காட்சி

by Admin / 21-07-2024 12:44:36am
ஆடித் தபசு...  ஹரியும் சிவனும் இணைந்த உருவமாக சங்கர நாராயணர் உருவத்தில் காட்சி

ஆடி மாதம் பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும்.. இந்து மதத்தில் முழு முதல் கடவுளான சிவனையும் காக்கும் கடவுளான பெருமாளையும் ஒன்றாக சேர்ந்து வழிபடக்கூடிய காலகட்டம் இது.. சைவ- வைணவம் இடையே ஆன பிரிவினையை நீக்கி இந்து மதம் பிரிவுகள் அற்றது. மும்மூர்த்திகளை அடிப்படையாகக் கொண்டு வழிபடக்கூடிய மதம் என்பதை  வெளிப்படுத்தும் விதமாக...... ஆடி மாசம் பௌர்ணமி தினத்தன்று சிவனையும் விஷ்ணுவையும் ஒன்றாக வழிபட வேண்டும் என்று அம்பிகை விருப்பம் கொண்டு பூலோகத்தில் கடும் தவம் மேற்கொண்டாள். அம்மனுக்கு ஹரியும் சிவனும் இணைந்த உருவமாக சங்கர நாராயணர் உருவத்தில் காட்சி கொடுத்த தெய்வீக தினம் ஆடி பௌர்ணமி தினம்.. இந்த தினத்தில் தான் திருநெல்வேலி- தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் தவக்கோளத்தில் காட்சி தந்து பக்தர்களை அருள் பாலிக்கும் காலம் .அம்மனை தரிசிக்கும் தவக்கோல காட்சியே ஆடி தபசு என்று அழைக்கப்படுகின்றது.இத் தினத்தில் சிவன் , நாராயணர், கோமதி அம்மன் மூவரையும் வழிபட்டால் அனைத்து விதமான நன்மைகளும் பக்தர்களுக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆடித் தபசு...  ஹரியும் சிவனும் இணைந்த உருவமாக சங்கர நாராயணர் உருவத்தில் காட்சி
 

Tags :

Share via