விரைவில் கோட்டையில் கொடியேற்றுவோம் - ஓபிஎஸ்

by Staff / 28-01-2024 02:59:59pm
விரைவில் கோட்டையில் கொடியேற்றுவோம் - ஓபிஎஸ்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அதிமுக தொண்டர் மீட்பு உரிமைக்குழு என்ற பெயரில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேசி வருகிறார். அந்தவகையில் திண்டுக்கல்லில் அதிமுக தொண்டர் மீட்பு உரிமைக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், அபகரிக்கப்பட்ட அதிமுகவை மீட்டு விரைவில் கோட்டையில் கொடி பறக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா கூட்டணி ஆண்டிகள் மடம், வரும் தேர்தலில் பிரதமர் மோடிதான் வெற்றி பெறுவார் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories