முதலமைச்சருக்கு கோவில் கட்டி வழிபாடு

by Staff / 20-09-2022 01:26:36pm
முதலமைச்சருக்கு கோவில் கட்டி வழிபாடு

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு அயோத்தியில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதை அவரது தீவிர பக்தரான பிரபாகர் மவுரியா, யூடியூப் சேனலில் கிடைத்த தொகையில் கட்டியுள்ளார். இங்குள்ள யோகியின் சிலைக்கு அன்றாடம் மவுரியா இரண்டு முறை அர்ச்சனை செய்து வருகிறார். முதல்வர் யோகியின் உயரத்திற்கு இணையாக அமைந்த சிலையின் கையில் அம்பும், தோளில் வில்லையும் ஏந்தி சிரித்த நிலையில் காட்சி தருகிறார் முதல்வர் யோகி.

 

Tags :

Share via