தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்

நாளை 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் முகாம்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் பருவநிலை மாற்றங்களால் காய்ச்சல் சற்று அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் தற்போது வரை 1,166 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
Tags :