தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக
இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில், தற்போது பாஜகவின் தேர்தல் அறிக்கையை ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ளார். அதில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் எனவும், உயர்கல்விக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலவசங்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேசி வரும் நிலையில் ஜேபி நட்டா வெளியிட்ட அக்கட்சியின் தேர்தல் அறிக்கை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :



















