தென்காசியில் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் கைது.

by Editor / 13-05-2023 08:28:38pm
தென்காசியில் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் கைது.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சாம்சன்  உத்தரவின் படி தென்காசி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  நாகசங்கர்   மேற்பார்வையில்  தென்காசி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலமுருகன்  தலைமையில் பெண் காவல் சார்பு ஆய்வாளர் செல்வி, சார்பு ஆய்வாளர் விஜயகுமார், சார்பு ஆய்வாளர் கல்யாணசுந்தரம் மற்றும் பெண் காவலர்கள் சகிதம் நேற்று 12.05.2023 ஆம் தேதி தென்காசி புதிய பேருந்து நிலைய பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் பெயரில் அங்கு சென்று விபச்சார தடுப்பு தடுப்பு சம்பந்தமாக ரோந்து செய்து கண்காணித்து வந்த போது சென்னையை சேர்ந்த 3 இளம் பெண்களை வைத்து விபச்சார புரோக்கர்களாக செயல்பட்ட 1). செங்கோட்டை பள்ளிவாசல் தெரு பீர்முகமது மகன் முஸ்தபா 2). திருச்சி இமாம் புலியூரை சேர்ந்த சேகர் மகன் மோகன் மற்றும் 3). தென்காசி கடைய தெருவை சேர்ந்த அப்துல் ஜாபர் மகன் அன்வர் அலி ஆகியோர்கள் தென்காசி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தப்பட்ட மூன்று இளம் பெண்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை  எடுக்கப்படும் என தென்காசி காவல்துறை சார்பில் எச்சரிக்கப்படுகிறார்கள்.

 

Tags :

Share via

More stories