பொங்கல் பண்டிக்கைக்காக சொந்த ஊருக்கு காரில் சென்ற 2 பேர் உடல் கருகி பரிதாபபலி

by Editor / 13-01-2022 04:58:55pm
பொங்கல் பண்டிக்கைக்காக சொந்த ஊருக்கு காரில் சென்ற 2 பேர் உடல் கருகி பரிதாபபலி

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் அருகே இன்று அதிகாலை முன்னாள் சென்ற டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது.இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் திருச்சியை சேர்ந்த குமார் மற்றும் வெங்கடவரதன் என்பது தெரியவந்துள்ளது.
பொங்கல் பண்டிக்கைக்காக சொந்த ஊருக்கு காரில் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான லாரியும் தீக்கிரையாகியுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories