கல்லூரிக்கு போக சொன்னதால் தந்தையை கொலை செய்த மகன்

நெல்லையில் கல்லூரிக்கு போக சொல்லி அறிவுரை வழங்கிய தந்தையை, மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மகன் தங்கபாண்டிக்கு (19) தந்தை மாரியப்பன் அறிவுரை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை கொலை செய்துள்ளார். இத்தகவலறிந்து மாரியப்பன் உடலைக் கைப்பற்றிய போலீசார், தங்கபாண்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :