ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இறுதி நாள்

by Admin / 17-01-2025 03:19:35pm
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இறுதி நாள்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் இன்று. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி இன்று காலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அ.தி.மு.க ,தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடாத நிலையில், திமுக. ..,நாம் தமிழர் கட்சி மட்டும் இருமுனை போட்டியாக களத்தில் உள்ளன.

நாளை வேட்பு மனு பரிசீலனை  நடைபெறுகிறது. 20-ம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான நாளாகும். இதற்கிடையே ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று பெரியார் அம்பேத்கார் கட்சி  மனு அளித்துள்ளது. ஜாதி, மதம் பற்றி பிரச்சாரம் செய்து பொது அமைதிக்கு  குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுவார் என்பதால் அவருக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று கேட்டுள்ளனர்..

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இறுதி நாள்
 

Tags :

Share via