தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 27 தொழிலாளர்கள் இறப்பு

by Admin / 08-05-2023 03:02:48pm
தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 27 தொழிலாளர்கள் இறப்பு

 

தென் அமெரிக்க நாடான தெற்கு பெருவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 27 தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக பெருவியன் அதிகாரிகள் தெரிவித்தனர் .வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் அல்லது சனிக்கிழமை அதிகாலையில் நடந்த விபத்துக்குப் பிறகு 175 தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக யானகிஹுவா சுரங்க நிறுவனம் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.. இறந்த 27 பேரும் சுரங்கத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒப்பந்ததாரரிடம் பணிபுரிந்ததாக-.தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்கத்தின் மேற்பரப்பில் இருந்து சுமார் 330 அடிக்கு கீழே உள்ள ஒரு பகுதியில் ஷார்ட் சர்க்யூட் காரணமாக வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன..

 

 

Tags :

Share via

More stories