சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு-பொதுமக்கள் மகிழ்ச்சி.

by Editor / 27-11-2024 10:49:58pm
சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு-பொதுமக்கள் மகிழ்ச்சி.

பண்டிகை கால விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க பயணிகளின் வசதிக்காக செங்கோட்டை - தாம்பரம் - செங்கோட்டை வாரம் மும்முறை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்களில்  (20681/20682) கூடுதலாக ஆறு ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரயில்களில் நவம்பர் இன்று 27 முதல் ஜனவரி 30 வரை கூடுதலாக ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு தூங்கு வசதி பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு பொது பெட்டி ஆகியவை  இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே  இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு தூங்கு வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் என 17  பெட்டிகளுடன் இயங்கி வந்தநிலையில்  மேலும் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டதால் மொத்தம் 23 பெட்டிகளுடன் இயங்குகிறது.தென்னகரயில்வேயின் இந்த நடவடிக்கை மக்கள்மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
 

 

Tags : சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு-பொதுமக்கள் மகிழ்ச்சி.

Share via