133 கிராம் தங்கம் திருடிய கும்பலை சேர்ந்தவன் கைது.
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு காவல் சரகம் கோவைகுளம் வடக்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் சுப்பையா என்பவரது வீட்டில் பீரோவில் இருந்து 133 கிராம் தங்க நகைகள் மற்றும் செல்போன் ஆகியவை திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரை தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பா உத்தரவின் பேரில் நாங்குநேரி காவல்துறைதுணைக் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் நாங்குநேரி காவல்துறை ஆய்வாளர் செல்வி தலைமையிலான காவல்துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி வீடியோ காட்சி பதிவுகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதன் தொடர்ச்சியாக மூன்றடைப்பு பேருந்து நிலையம் பகுதியில் நின்று கொண்டிருந்த களக்காடு ஜே ஜே நகரை சேர்ந்த சாந்தி, கசமுத்து, ஆகியோர் மற்றும் அவர்களது மகன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த துரை ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு திருட்டு போன நகையில் 28.5 கிராம் தங்கம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டு மீதமுள்ள நகைகள் துரையின் மகன் மாரியப்பன் என்பவனிடம் உள்ளதாக எதிரிகள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் படி இன்று களக்காடு புதிய பேருந்து நிலையம் அருகே வைத்து மாரியப்பனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 104.5 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. திருட்டு வழக்கில் திருட்டுப்போன 133 கிராம் நகை மீட்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூபாய் 6 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஆகும் என காவல்துறையினை தெரிவித்தனர்.
Tags :