விகடன் நாளிதழுக்கு எதிராக பாஜக வழக்கறிஞர் புகார் மனு.

by Editor / 16-02-2025 07:28:43am
விகடன் நாளிதழுக்கு எதிராக பாஜக வழக்கறிஞர் புகார் மனு.

அண்மையில் அமெரிக்க அதிபர் ஜனால்ட் டிரம்ப் அழைப்பை ஏற்று பாரத பிரதமர் நரேந்திர தாமோதர் தாஸ் மோடி அவர்கள் மூன்று நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். 

அப்போது பாரத பிரதமருக்கு அமெரிக்க அதிபர் சிறப்பு வரவேற்பு கொடுத்து இந்தியா அமெரிக்கா இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும்  வகையில். தேசப் பாதுகாப்பு, வர்த்தகம், தொழில், தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளிட்ட தேசத்தின் இறையாண்மை சம்பந்தப்பட்ட விவகாரங்களை விவாதித்தனர். 

இந்த சந்திப்பு சம்பந்தமாக இருநாட்டு கூட்டு அறிக்கையாக பிரதமர் அலுவலகம் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அந்த அறிக்கையில் அமெரிக்க அதிபர் மற்றும் பாரதப் பிரதமர் சந்திப்பு குறித்தான  விவரங்களையும் செய்திகளையும் விரிவாக வெளியிட்டுள்ளது.

இந்த சந்திப்பு பல நாட்டு அதிபர்தர்களாலும் தலைவர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டது. 

இந்த சந்திப்பு குறித்து விகடன் நாளிதழ்  சந்திப்பையும் பாரத பிரதமரையும் அவமானப்படுத்தும் வகையிலும், பொய்யான, விஷமத்தனமான, மலிவான செய்தியை வெளியிட்டு. பாரதப் பிரதமரை அமெரிக்க அதிபர் முன் அவமானப்படுத்தும் தீய நோக்கத்தோடு கார்ட்டூன் படமிட்டு அட்டைப் பக்கத்தில் விகடன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விகடன் நாளிதழ் அதன் ஆசிரியர், செய்தி தொகுப்பாளர், புகைப்படக்காரர் ஆசிப் கான் உள்ளிட்ட நபர்கள் மீது சட்ட மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுத்து எஃப்ஐஆர் வழக்கு பதிவு செய்து  சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பாஜக வழக்கறிஞர் ஜிஎஸ் மணி புகார் அளித்துள்ளார். 

இந்த புகார் மனு மத்திய உள்துறை செயலர், சிபிஐ, தீவிரவாத குற்றங்களை விசாரிக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு, தமிழக உள்துறை செயலர், சென்னை கமிஷனர், டெப்டி கமிஷனர், க்ரைம் பிரான்ச், சென்னை உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த புகார் மனுவில் விகடன் நாளிதழ் மற்றும் அதன் ஆசிரியர் செய்தி தொகுப்பாளர் புகைப்படக்காரர் ஆசிப் கான் ஆகியோர் வேண்டுமென்றே தீய எண்ணத்தோடு பாரதப் பிரதமரையும் பாரத தேசத்தையும் அயல்நாட்டு அதிபர்கள் மற்றும் தமிழர்கள் மத்தியில் அவமானப்படுத்தும் வகையிலும். பாரத தேசத்தின் அமைதியும் பாதுகாப்பையும் அச்சுறுத்தும் வகையிலும், அமெரிக்கா இந்தியா உறவில் விரிசல் ஏற்படுத்தும் வகையிலும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் செயலாகவும் இந்த செய்தி வேண்டும் என்று விஷமத்தனமாக  பாரதப் பிரதமரை அவமானப்படுத்தும் தீய எண்ணத்தில் கார்ட்டூன் படம் இட்டு பாரதப் பிரதமரை இழிவுபடுத்த வகையில் தீய நோக்கத்தோடு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்றும். 

எனவே சம்பந்தப்பட்ட விகடன் நாளிதழ் அதன் ஆசிரியர், செய்தி தொகுப்பாளர், அட்டைப்படம் வெளியிட்ட ஆசிப் கான் மற்றும் இந்த தீய செயலுக்கு உடந்தையாக இருந்த அனைவருக்கும் எதிராக எஃப்ஐஆர் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து இவர்களுக்கு தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : விகடன் நாளிதழுக்கு எதிராக பாஜக வழக்கறிஞர் புகார் மனு.

Share via