5 மாவட்டங்களில் கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லை- தமிழக அரசு அறிவிப்பு

by Admin / 29-07-2021 02:18:05pm
5 மாவட்டங்களில் கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லை- தமிழக அரசு அறிவிப்பு

அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 136 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், அடுத்தபடியாக கோவையில் 116 மற்றும் சென்னையில் 100 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பாக தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:-
 
கொரோனா 2-ம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் 5 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளன.

கடந்த ஜூலை 9-ந்தேதி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 947 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. அதில் ராமநாதபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை மற்றும் விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளன.

ஈரோடு

அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 136 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், அடுத்தபடியாக கோவையில் 116 மற்றும் சென்னையில் 100 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.

குறைந்தபட்சமாக காஞ்சிபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.

கடந்த ஜூன் மாதம் 2-ந்தேதி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1491 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தன. தற்போது அவை குறைந்துள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :

Share via