ஒரே நாடு - ஒரே தேர்தல் என்பதில் சதித்திட்டம் உள்ளது

by Staff / 03-09-2023 05:16:45pm
ஒரே நாடு - ஒரே தேர்தல் என்பதில் சதித்திட்டம் உள்ளது

ஒரே நாடு - ஒரே தேர்தல் சட்டம் நிறைவேறினால், திமுக மட்டுமல்ல, எந்த அரசியல் கட்சியும் நாட்டில் செயல்பட முடியாது. எனவே ‘One Man Show’ ஆகிவிடும். " என்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ந. மனோகரன் இல்லத் திருமண விழா தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியது, கழகம்தான் குடும்பம், குடும்பம்தான் கழகம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் அதே நேரத்தில் கொள்கைக் குடும்பமாக இருக்கிறோமா இல்லையா என்பதுதான் முக்கியம். யார் காலிலும் பாதத்திலும் விழுந்து வளர்ந்த குடும்பம் அல்ல இது. தவழ்ந்து சென்று வளர்ந்த குடும்பம் அல்ல இது. லட்சியக் குடும்பமாக, ஒரு கொள்கைக் குடும்பமாக, அண்ணா உருவாக்கிய இயக்கம். அண்ணா ஒரு குடும்பப் பாச உணர்வோடு இந்த இயக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். ஆனால் இது சிலருக்கு இன்றைக்கு வயிற்றெரிச்சலாக இருக்கிறது. அதில் என்னென்ன பேசுகிறார் என்பதை எல்லாம் நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. அதைப்பற்றி நாம் கவலையும் படவில்லை. இன்றைக்கு நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையை நீங்கள் எல்லாம் உணர்ந்து பார்க்க வேண்டும்.

 

Tags :

Share via

More stories

Logo