வயநாடு நிலச்சரிவு: ரூ.1,200 கோடி இழப்பு
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 1,200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கேரள உயர் நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் கே. கோபாலகிருஷ்ண குருப் தானாக முன்வந்து தாக்கல் செய்த மனுவில், 1,555 வீடுகள் வசிக்கத் தகுதியற்றதாக மாறியுள்ளதாகத் தெரிவித்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் வி.எம்.ஷியாம் குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பரிசீலித்து வருகிறது.
Tags :