நடிகை பிரியங்கா மோகன் புகைப்படத்தை ஏ ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கவர்ச்சிகரமான புகைப்படங்களாக மாற்றி....
ஏ ஐ தொழில்நுட்பம் வளர வளர தனி மனித அச்சுறுத்தல்களும் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. பிரபல திரைப்பட நடிகை பிரியங்கா மோகன் புகைப்படத்தை ஏ ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கவர்ச்சிகரமான புகைப்படங்களாக மாற்றி சமூக ஊடகங்களில் தவறான நோக்கத்தோடு பரப்பப்படுவதற்கு பிரியங்கா மோகன் ஏ ஐ தொழில்நுட்பத்தை வளர்ச்சிக்காக பயன்படுத்தாமல் ,இது போன்ற தவறான செயல்களில் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்
இது குறித்து அவர் தனது எக்ஸ் கணக்கில் "என்னை தவறாக சித்தரிக்கும் சில ஏ ஐ உருவாக்கப்பட்ட படங்கள் பரவி வருகின்றன. தயவுசெய்து இந்த போலி காட்சிகளைப் பகிர்வதையோ அல்லது பரப்புவதையோ நிறுத்துங்கள். ஏ ஐ ஆல் நெறிமுறை படைப்பாற்றலுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும், தவறான தகவல்களுக்கு அல்ல. நாம் என்ன உருவாக்குகிறோம், என்ன பகிர்ந்து கொள்கிறோம் என்பதில் கவனமாக இருப்போம். நன்றி" என்று பதிவிட்டுள்ளார் .
பவன் கல்யாண் முக்கிய வேடத்தில் நடித்த சமீபத்திய படமான தெலுங்கில் வெற்றி பெற்ற 'தே கால் ஹிம் ஓஜி' படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தை பொய்யாக சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு [ ஏ ஐ ] மூலம் உருவாக்கப்பட்ட போலி காட்சிகள் பரவுவதை எதிர்த்துப் பேசியுள்ளார்..
Tags :



















