வாக்குப்பதிவு எந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது சத்ய பிரதா சாகு
மே 2 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மே 2 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்தார்.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் எனவும் கூறினார். வாக்குப்பதிவு எந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது அதற்கான வாய்ப்புகளும் இல்லை என தெரிவித்தார்.
Tags :