வங்கிகளுக்கு மொத்தம் 11 நாட்கள் விடுமுறை.

by Editor / 25-12-2023 08:12:34pm
 வங்கிகளுக்கு மொத்தம் 11 நாட்கள் விடுமுறை.

வங்கிகளின் மாதந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அதன்படி, ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறையாகும். இரண்டாவது, நான்காவது சனிக்கிழமை மற்றும் நான்கு ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து ஜன.1 புத்தாண்டு, ஜன.15 பொங்கல், ஜன.16 திருவள்ளூர் தினம், ஜன. 17 உழவர் திருநாள், ஜன.26 குடியரசு தினம் என மொத்தம் 11 நாட்கள் விடுமுறையாகும். இதனால் அதிக தொகை தேவைப்படுபவர்கள், வங்கி செல்பவர்கள் முன்பே திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

 

Tags : வங்கிகளுக்கு

Share via