கொளத்தூர் தொகுதியில் நான்காவது முறையாக களம் காண்கிறார்.முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்.
இன்று கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின். கடந்த மூன்று தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றுமுதலமைச்சர்... முதல் வெற்றியில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தார். இரண்டாவது வெற்றியில் துணை முதலமைச்சராக ... மூன்றாவது வெற்றியில் முதலமைச்சராக பதவி வகுத்து பல்வேறு திட்டங்களை கொளத்தூர் பகுதிகளில் நிறைவேற்றி ,மக்களிடம் பெருத்த ஆதரவை பெற்று இருக்கின்ற நிலையில் ,இப்பொழுது நான்காவது முறையாக களம் காண்கிறார்.. அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் தி.மு.கவிலிருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு சென்ற .வி. .எஸ் .பாபு. அதிமுக சார்பாகவும் நாம் தமிழர் கட்சி சார்பாகவும் களமிறக்கப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் கொளத்தூர் தொகுதியில் அவ்வளவு பரிச்சயமானவர்கள் என்று சொல்வதற்கு இல்லை. இருப்பினும், கட்சியினுடைய சின்னத்தை- கட்சியினுடைய பிரச்சாரத்தை மையமிட்டு இந்த தொகுதியில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் இந்த தொகுதி வேட்பாளராக வந்த பிறகு தொகுதி பல்வேறு வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்பது கண்கூடாக தெரியும் காட்சி. வெறும் கட்சி வேட்பாளராக களம் இறக்கப்பட்டிருப்பவர்கள் முதலமைச்சரை எதிர்த்து வெற்றி பெறுவது என்பது சாதாரணமானதன்று.
Tags :


















