சீனாவில் மோசமான வானிலை மலை மாரத்தான் போட்டியில் பங்கேற்ற 21 பேர் பலி
சீனாவின் வடமேற்கில் ஒரு மலை மாரத்தான் கிராஸ்-கன்ட்ரி ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீன அரசின் அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனத்தால் மேற்கோள் காட்டப்பட்ட மீட்பு தலைமையகம், நேற்று பிற்பகல் 1 மணியளவில் கன்சு மாகாணத்தின் பெயின் நகரில் உள்ள மஞ்சள் நதி கல் வன சுற்றுலா தளத்தில் 100 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் அவர்கள் ஈடுபட்டபோது ஆலங்கட்டி, உறைபனி மழை மற்றும் காற்று வீசியதால் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
பங்கேற்பாளர்கள் உடல் அசௌகரியம் மற்றும் உடல் வெப்பநிலையில் திடீர் வீழ்ச்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அது கூறியது.
சிலர் காணாமல் போயுள்ள நிலையில் ஓட்டப்பந்தயம் நிறுத்தப்பட்டது.
இன்று அதிகாலை வரை கிடைத்த அதிகாரப்பூர்வ தகவலில் 16 பேர் இறந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போயுள்ள ஐந்து பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக சின்ஹுவா தெரிவித்திருந்தது. 700’க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் இவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மொத்தம் 172 பேர் பந்தயத்தில் பங்கேற்றதாகவும், 151 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சின்ஹுவா தெரிவித்துள்ளது.
எனினும் பின்னர் கிடைத்த தகவலின்படி, தேடப்பட்டு வந்த ஐந்து பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயிரிழந்துள்ளது
Tags :