தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் தம் பரப்புரையை தொடங்கினார்.
இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் தம் பரப்புரையை தொடங்கினார்.
நல்ல காரியத்தை தொடங்கும் பொழுது ...நம்மல புடிச்சவங்க இருக்குற இடத்துல இருந்து நம்ம தொடங்கலாம். தமிழ்நாடே நமக்கு புடிச்ச இடம் தான் .நமக்கு மனசுக்கு புடிச்ச இடம்தான். தமிழ்நாட்டில் எங்கிருந்தாலும் நம்ம ஸ்டார்ட் பண்ணலாம். ஆனா, நம்ம வீட்டு வாசலில் இருந்து ஸ்டார்ட் பண்ணுதுன்னு ஒன்னு இருக்குல்ல .நம்மள பெத்த அம்மா இருக்கிற இடத்தில இருந்து அவங்களோட ஆசியோட ஸ்டார்ட் பண்ணுவது என்று ஒன்று இருக்கிறது அல்லவா. அதனால் ஒரு ப்ரைட்டான சைனா இருக்கும். இதைத்தான் மனசுல வச்சு உங்களுடைய விஜய்... உங்களுடைய பெரம்பூர் தொகுதியில் இருந்து ,நம்ம பெரம்பூர் தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை ஸ்டார்ட் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டான். வட சென்னை அடையாளமாக இருக்கிற பெரம்பூர் தொகுதியில சர்ச் இருக்கிற ...நரசிம்ம கோயில் இருக்கிற ....மசூதி இருக்கிற நம்மளோட மக்கள் இருக்கிற தொகுதியில இருந்து ஸ்டார்ட்பன்ரேன்,... ... போதைப் பொருள் அதிகமாக இருக்கிற நம்ம தமிழ்நாட்ட.. நம்ம காப்பாத்தியே ஆகணும். தமிழ்நாட்டை இப்படி ஒரு நிலைமைக்கு வந்ததுக்கு யாருன்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்ல. தீய சக்தி திமுக தான் காரணம் .இப்படி ஒன்னுக்கும் உதவாத ஒரு ஆட்சியை நடத்திட்டு.. விரைவில் விடைபெற ப்போகும் ஸ்டாலின் சார் தான் காரணம். ஒரு சோறு தண்ணி கூட இல்லாம இருந்திடலாம்.ஒரு அடிப்படை வசதி இல்லாம எப்படி இருக்கிறது? நம்ம பொம்பள பிள்ளைங்க எல்லாம் ராத்திரி டாய்லெட் கூட போக முடியல. போயிட்டு வர பாதுகாப்பில்ல. என்ன நடந்தாலும், ஏது நடந்திடும் என்று பயம் இருக்கு. ஒரு பாட்டி வயசுல இருக்குறவங்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை .ஒரு டீ கடையில ஒரு டீ கூட குடிக்க முடியல. போதையை போட்டு வந்து வெட்டிட்டு போறாங்க. இது என்ன நாடா... காடா.. இங்க கவர்மெண்ட் இருக்கா, இல்லையா,, அஞ்சு வருஷம் போலீஸ் டிபார்ட்மெண்ட்டா கையில வைத்திருக்கிற ஸ்டாலின் சார் ,ஒரு அடிப்படை பாதுகாப்பு கொடுக்க முடியல .இந்த ஆட்சி எதற்கு .அதிகாரம் எதற்கு? அதனால என்னுடைய அம்மா, அக்கா, தங்கைகளே ,தோழர்களே, இளைஞர்களே, நண்பர்களே உங்களை நான் கேட்கிறேன். இந்த தீய சக்தி திமுக ஆட்சியில் பாதுகாப்பு இருக்கா இந்த தீய சக்தி திமுகவில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்கா. இந்த தீய சக்தி திமுக. நீங்க நிம்மதியா இருந்தீங்களா .ஸ்டாலின் சாருக்கு மக்களெல்லாம் முக்கியமே கிடையாது.மக்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு எதை பத்தியுமே முக்கியம் கிடையாது. அவருக்கு, அந்த திமுக அரசுக்கும் இந்த அஞ்சு வருஷத்துல குடும்பத்தோட கொள்ளையடித்த தான் முக்கியம்...
நான் முன்னாடியே சொன்னது மாதிரி டாஸ்மாக் ஆயிரம் கோடி ஊழல் வெளியே தெரிந்தது. இது வெளியே தெரியாது எவ்வளவு இருக்கோ .அதே மாதிரி நகராட்சி துறை ஆயிரம் கோடி ஊழல். பசங்க, பிள்ளைங்க எல்லாம் படிச்சிட்டு வேலை தேடி எங்கெங்கெல்லாம் அலையுறாங்க. அதுக்கு இந்த கவர்மெண்ட் என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா ...நகராட்சி துறையில் ,வேலை வாங்கி தரவா சொல்லிட்டு பணத்தை வாங்கிட்டு ...தகுதியானவங்களுக்கு வேலை இல்லாம செஞ்சுட்டாங்க ..அதனால ,நம்ம தம்பி ,தங்கைகளே உங்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லாத எந்த ஸ்டாலின் சார் என்ன செய்யலாம் தூக்கி வீசி விடலாமா உங்களுக்கு பாதுகாப்பு தனக்கு வசதியான வாழ்க்கை இருந்தும் உங்களுக்காக நான் களத்தில் இறங்கி இருக்கிறேன்.கனவு காண்பாங்க ,,பணத்தை கொடுத்து ஜெயித்து விடலாம்னுநினைப்பாங்க காசு கொடுத்தால் வாங்கிக் கொண்டு அவங்க செவல்ல. சத்தமா விசில் ஊதுங்க.. அதனால வர 23ஆம் தேதி வரக்கூடிய தேர்தல்ல. விசில் சத்தத்தை ஊதுங்கள் என்றும் சென்னையில் இருக்கக்கூடியவர்கள் சொந்த ஊரில் ஓட்டு அளிக்க வேண்டும் என்றால் முன்னாலே டிக்கெட்டுகளை பதிவு செய்து விடுங்கள் இது ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்று சொல்லி காட்டமாக பேசினார்..
எல்லா வலிகளையும் தாங்கிக்கிட்டு உங்களுக்காக வந்து இருக்கிறேன். நாலுமுனை போட்டி எட்டு முனை போட்டி எல்லாம்கடந்து எதை நோக்கி வந்திருக்கிறேன் உங்களை.தேடி அதனால உங்க விஜய்க்கு, உங்க தம்பிக்கு, உங்க புள்ளைக்கு ,நீங்க ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க,.விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க,இது ஒரு விசில் புரட்சி.. வேற, வேற வேட்பாளர்கள் நிறுத்தனாலும் நானும் அந்த வேட்பாளர்களும் வேற வேற கிடையாது. கான்ஃபிடன்ட்டா இருங்க. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் .மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்.
Tags :


















