அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி-சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என்று சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழக முழுவதும் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய பல்கலைக்கழக மாணவிகளை மிரட்டி வீடியோ எடுத்து வைத்து தொடர்ந்து பாலியல் அத்துமீறையில் ஈடுபட்ட ஞானசேகரன் மீதான 11 வழக்குகளிலும் அவன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜூன் இரண்டாம் தேதி தண்டனை விவரங்களை நீதிபதி ராஜலக்ஷ்மி வழங்கி உள்ளார்.. மிக குறுகிய காலகட்டத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகருக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :