குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு-சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தற்காலிக தடை.

தென்காசி மாவட்டம் நகர் பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. இதில் மேற்கு தொடர்ச்சி மலையின் உட்பகுதியில் இரவு நேரத்தில் தொடர்ந்து பெய்த சாரல் மழை காரணமாக குற்றால அருவிகளான பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீராக கொட்டி வருகிறது.இதில் மெயின் அருவியில் தண்ணீர் அதிகரித்து அபாய வளைவு வரை ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குற்றாலத்தில் இதமான சூழல் நிலவி வரும் நிலையில் அருவியில் குளிக்க முடியாததால் அருவிகரையோரம் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் செல்பி எடுத்து சென்று வருகின்றனர்.
Tags : குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு-சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தற்காலிக தடை