கிரிக்கெட் போட்டியை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்.

by Admin / 15-05-2023 05:22:09pm
கிரிக்கெட் போட்டியை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ  துவக்கி வைத்தார்.

 

 

 

கோவில்பட்டி கயத்தாறு அருகே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கயத்தாறு அருகே டி.என் குளத்தில் முன்னாள் முதல்வர் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 69 வது பிறந்த நாளை முன்னிட்டு விண்ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பில் நடைபெற்ற 10ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியை  முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை மற்றும் பரிசுத்தொகை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார்,கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, மாணவர் அணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன்,ஆசூர் காளிபாண்டியன், கீரிதர், கோபி, முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

 

Tags :

Share via

More stories

Logo