தமிழகத்தில் 13 நகராட்சி ஆணையர்கள் மாற்றம்

by Editor / 10-07-2021 07:02:41pm
தமிழகத்தில் 13 நகராட்சி ஆணையர்கள் மாற்றம்

 

தமிழகத்தில் காஞ்சிபுரம், மறைமலை நகர், தாம்பரம் உள்ளிட்ட 13 நகராட்சி ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், பல்லாவரம் கொடைக்கானல் உள்ளிட்ட நகராட்சி ஆணையர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதேபோல் ராணிப்பேட்டை மாவட்ட வட்டாட்சியர்களூம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு வட்டாட்சியர்களையும் மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென 13 நகராட்சி ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்பதும் இன்னும் ஒரு சில நகராட்சி ஆணையர்கள் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories