மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் சந்திப்பு
சமீபத்தில் அமெரிக்கா சென்று உடல்நிலையை பரிசோதனை முடித்து விட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், வரும் 12ஆம் தேதி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளரை சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளார். மாவட்ட செயலாளர்கள் மட்டும் சென்னைக்கு வரவேண்டும் என தொலைபேசி மூலம் ரஜினி தரப்பிலிருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஜூலை 12ஆம் தேதி ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளி வந்துள்ளன.தேர்தல் முடிந்தபின் ஆலோசனைக்கு தேவை என்ன? என்ற கேள்வி எழுந்தாலும் இந்த ஆலோசனையில் ரஜினி என்ன கூற இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் உள்ளனர்
Tags :