கேரளம் வைக்கம் நூற்றாண்டு விழா- முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறப்புரை
கடந்த நூற்றாண்டில் கேரளத்தில் ஜாதிய கொடுமை தலைவிரித்தாடியது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த புலையர்,ஈழவர்கள் என்று சொல்லக்கூடியவர்களை கோவிலுக்குள் அனுமதித்து சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து அப்போதைய சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களை வைக்கம் கோவிலுக்குள் அழைத்து சென்று வழிபட வைத்தார்.வைக்கம் கோயில் நுழைவு போராட்டத்தின் காரணமாக வைக்கம் வீரர் என்று பொியார் அழைக்கப்பட்டாா்..அன்றைய தினத்தில் அது மிகப்பெரிய ஒரு சமூகப் புரட்சியாக கொண்டாடப்பட்டது. இந்த நாளை கொண்டாடும் முகத்தான் இன்றைய கேரளா அரசு நூற்றாண்டு விழாவை கொண்டாடியது. விழாவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.விழாவில் கேரளா முதலமைச்சர், கேரளா அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்,தமிழக பாராளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Tags :