உதய சூரியனை உதிக்கச் செய்யுங்கள். ஜெகத்ரட்சகன்

by Staff / 12-12-2022 01:53:22pm
  உதய சூரியனை உதிக்கச் செய்யுங்கள். ஜெகத்ரட்சகன்

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்தை தமிழ்நாடு முதலமைச்சரால் தான் பெற்றுத்தர முடியும் என விழுப்புரம் மாவட்டம் வானூரில் திமுக நிர்வாகி திருமண விழாவில் ஜெகத்ரட்சகன் எம்.பி. தெரிவித்துள்ளார். புதுச்சேரியின் 30 தொகுதியிலும் உதய சூரியனை உதிக்கச் செய்ய வேண்டும் எனவும் ஜெகத்ரட்சகன் எம்.பி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் புதுச்சேரியும் திமுக காங்கிரஸ் இடையே பல ஆண்டுகாலமாக அரசியல் கூட்டணி நீடித்து வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையை ஏற்கும் காங்கிரஸ், புதுச்சேரியில் தனது தலையை திமுக ஏற்கவேண்டும் என்று கூறி சீட்டுக்களை பெற்று வருகிறது தமிழகத்தைப் போல புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி படிப்படியாக தேய்ந்து வருகிறது. அங்கு பாஜக மெதுவாக வளரத் தொடங்கியுள்ளது. அங்கு ஆட்சியமைக்க பாஜக முயற்சி செய்கிறது. இப்போதே என்ஆர் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி அரசில் பாஜக அங்கம் வகிக்கிறது. எனவே புதுவையில் பாஜகவை வளர விடக்கூடாது என்று பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.ஐ தடைசெய்ய தமிழக அரசியல் போதிய  இல்லை  காலையே வந்த செய்தி.. பார்த்து ஆடிப்போன திமுக எம்பி ஜெகத்ரட்சகன்.. சைபர் கிரைமிற்கு பறந்த புகார்! முட்டல் மோதல் கடந்த சட்டசபை தேர்தலின் போதே புதுச்சேரியில் தனித்து போட்டியிட வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் வலியுறுத்தினர். ஜெகத்ரட்சகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. பின்னர் ஒருவழியாக சமாதானமாகி கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து போட்டியிட்டனர். ஆனால் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. திமுக குறிப்பிடத்தகுந்த இடங்களில் வெற்றி பெற்றது. என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் தற்போது புதுச்சேரியில் ஆட்சி நடக்கிறது. துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலையீடு அதிகமாக உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டை போல புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சி தேவைப்படுகிறது. புதுச்சேரியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நிச்சயமாக அமையும். தமிழ்நாட்டையும் புதுச்சேரியையும் யாரும் பிரித்துப் பார்க்க முடியாது. என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். புதுச்சேரியில் தற்போது நடைபெறும் ஆட்சி மக்களுக்கான ஆட்சி இல்லை. ஆளுநர் ஆட்டிப்படைக்கும் வகையில் புதுச்சேரியில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. கட்சிக்குள் போட்டி இருக்க வேண்டும் பொறாமை இருக்கக் கூடாது. நான் சொல்வதை அப்படியே பின்பற்றக்கூடிய தொண்டர்கள் தான் இயக்கத்தில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் காலாவதி பிற மாநிலங்களைப் போல புதுவையிலும் காங்கிரஸ் காலாவதியாக உள்ளதாக திமுகவினர் கருதுகின்றனர். இதனால் புதுவையில் தனித்து போட்டியிட வேண்டும் என திமுக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். 25 ஆண்டுகளுக்கு மேலாக புதுவையில் திமுக தனித்து போட்டியிடவில்லை. இனியாவது திமுக தனித்து போட்டியிட்டு வலிமையை நிரூபிக்க வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஜெகத்ரட்சகன் பரபரப்பு எனவேதான் 2026ஆம் ஆண்டு நிகழ உள்ள சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைக்க வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் திமுக தலைமையை வலியுறுத்தி உள்ளனர். அதனை உறுதிபடுத்தும் விதமாக ஜெகத்ரட்சகன் எம்.பி பேசியுள்ளார். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்தை தமிழ்நாடு முதலமைச்சரால் தான் பெற்றுத்தர முடியும் என விழுப்புரம் மாவட்டம் வானூரில் திமுக நிர்வாகி திருமண விழாவில் ஜெகத்ரட்சகன் எம்.பி. தெரிவித்துள்ளார். 

 

Tags :

Share via