ஆண் நண்பருடன் சென்ற இளம்பெண் விபரீத முடிவு

by Editor / 19-05-2025 03:19:04pm
ஆண் நண்பருடன் சென்ற இளம்பெண் விபரீத முடிவு

கர்நாடகா: தக்ஷிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த அகன்ஷா (22). கடந்த 6 மாதங்களாக டெல்லியில் விண்வெளி என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், சில ஆவணங்களை பெற பஞ்சாப்பில் தான் படித்த கல்லூரிக்குச் சென்ற அகன்ஷா, 4-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அகன்ஷா கேரளாவைச் சேர்ந்த ஆண் நண்பருடன் கல்லூரிக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அகன்ஷாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.

 

Tags :

Share via