உகாண்டாவில் பல கொலைகளை செய்து மனித உடலை சாப்பிட்டு வந்த கொடூரன் கைது
உகாண்டா பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியான ஜெனரல் முஹூசி கைனெருகாபா தம் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் செய்தி பேர் அதிர்ச்சியை உலகளவில் ஏற்படுத்தி உள்ளது. உகாண்டாவை சார்ந்த முஜூரிஸி மோசஸ் என்பவன் கொடூரமாக பல கொலைகளை செய்து மனித உடலை சாப்பிட்டு வந்ததாகவும் இந்த நிகழ்வு 2010 முதல் 2025 வரை கிட்டத்தட்ட 15 ஆண்டுகளில் உகாண்டாவின் மசாக்கா, இபந்தா மற்றும் காஸோ ஆகிய மாவட்டங்களில் இத்தகு கொடூரமான செயலை அரங்கேற்றி உள்ளதாகவும் அன்புள்ள வீடுகளுக்குள் புகுந்து அங்கு இருப்பவர்களை தாக்கி சில பெண்களை காதலிப்பதாக ஏமாற்றியும் அவன் படுகொலை செய்துள்ளதை சுட்டிக்காட்டும் அவர் முஜூரிஸி மோசஸை "உகாண்டா வரலாற்றிலேயே மிக மோசமான தொடர் கொலைகாரன் மற்றும் நரமாமிசம் உண்பவன்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். , தற்பொழுது அவன் பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டு பல்வேறு ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் அவனை பொதுமக்கள் முன்னிலையில் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் இராணுவ தளபதி பதிவிட்டுள்ளார்.
Tags :


















