ஆண்டிபட்டி தேக்கம்பட்டி கிளை சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்; நான்கு போ்பிடிபட்டனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி கிளை சிறையில் இருந்து 17 கைதிகள் நேற்று இரவு பத்து முப்பது மணி அளவில் ஒரே அறையில் அடைக்க வைக்கப்பட்டிருந்த கைதிகள் ஒருவருக்கு காக்கா வலிப்பு வந்தது போல் பாவனை செய்து அவருக்கு முதல் உதவி செய்வதற்காக அறை கதவை திறந்து உள்ளே வந்த சிறை காவலர்களை அங்கிருந்த 17 கைதிகள் திடீரென்று தாக்கி சிறையில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த தாக்குதலின் போது இரண்டாம் நிலை காவலர் தாக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இரண்டு காவலர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. தப்பி ஓடிய கைதிகளில் நான்கு பேர் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள 13 கைதிகளை பிடிப்பதற்காக 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Tags :



















